Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவன்தான் அப்படி நடிக்க சொன்னார் - தீபா வீட்டிற்கு சென்ற போலி அதிகாரி தகவல்

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (10:29 IST)
தீபாவின் வீட்டில் வருமானத்துறை அதிகாரியாக நடித்த மித்தேஷ்குமார், தீபாவின் கணவர் மாதவன் தன்னை போலி வருமானத்துறை அதிகாரியாக நடிக்க சொன்னார் என வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமான வரி சோதனை செய்யும் அதிகாரி போல் ஒருவர் நடித்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த மர்ம நபர் சுவரேறி குதித்து தப்பிவிட்டார்.
 
அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சல்லடை போட்டு தேடப்பட்டது. அந்நிலையில் ஜெ.தீபா வீட்டில் நுழைந்த போலி வருமானவரித்துறை அதிகாரி நேற்றிரவு மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தன்னுடைய உண்மையான பெயர் பிரபு என தெரிவித்த அவர், தீபாவின் கணவர் மாதவன் தன்னை போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க சொன்னார் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டில் யாரோ தாக்குதல் நடத்தினர் என தீபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அது அனைத்தும் தனது டிரைவர் ராஜாவை வைத்து அவர் நடத்திய நாடகம் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. 
 
இந்நிலையில்தான், தீபாவின் வீட்டிற்கு ஒரு போலி அதிகாரியை மாதவன் தற்போது அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments