தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.
சமீபத்தில் நீட் நுழைவு தேர்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர்கள் தனுஷ் மற்றும் கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சம் மாணவர்களுக்கு அலைபேசி வழியாக மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் சிக்காமல் காக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.