ஸ்டாலினுக்காக காத்திருக்கும் 11 கிலோ கருணாநிதியின் தங்கச்சிலை

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:15 IST)
திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து அடுத்த திமுக தலைவரை தேர்வு செய்ய நேற்று மனுதாக்கல் நடந்தது. நேற்று மு.க.ஸ்டாலின் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தலைவராக அறிவிக்கப்படவுள்ளார்.
 
நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் இதனை பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார். அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் திமுக தலைவராகப்போகும் மு.க.ஸ்டாலினுக்கு 11 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கருணாநிதி சிலையை  சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் பரிசளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நாளை முறைப்படி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதும் இந்த சிலையை அவர் வழங்கவிருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments