அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பாஜகவின் கிளை அமைப்பு போல் செயல்படுகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை துன்புறுத்தியுள்ளனர் என்றும்,
மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை திரட்ட முயல்வதால் திமுக மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்தவே செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர் என்றும், வரும் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த உள்ளதால் பாஜகவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது பாஜக என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.