Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் கமலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் கமலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
, திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (12:07 IST)
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியர் விருதைப் பெறும் நடிகர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


 

திரையுலகில் கடின உழைப்பு, கலைத்திறமை ஆகியவற்றால் சர்வதேச அளவிலான செவாலியர் விருது பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திற்குமே நமது கமல்ஹாசன் அவர்கள் பெருமை சேர்த்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்குப் பிறகு செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது எனக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

களத்தூர் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, திரைத்துறையில் கடந்த அரை நூற்றாண்டுகளாக கொடி கட்டிப் பறந்து வரும் அவர் இதுவரை பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் பல்வேறு தேசிய, மாநில விருதுகளையும், ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரது சாதனைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல் கிடைத்திருக்கும் பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது திரையுலக வாழ்வில் அவருக்கு மிக முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நடிகர், இயக்குநர், திரைக் கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவில் பன்முகத் திறமையாளரான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மேலும் பல விருதுகளை வாங்கிக் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்."

- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.எச்.டி படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்த எம்.பில். மாணவன்