பழம்பெரும் தமிழ் சிந்தனையாளர்களில் ஒருவரான அயோத்தியதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பூர்வபௌத்தம், திராவிடம் ஆகிய வார்த்தைகளை அரசியல் ரீதியாக முதலில் பயன்படுத்தியவர் அயோத்திய தாசப் பண்டிதர். அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு என இவர் குடும்பத்தார் ஆற்றிய சேவை மிகப்பெரியது. திருக்குறள் ஓலைச்சுவடி பதிப்புகளை அச்சாக்கம் பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் அயோத்தியதாசரின் தாத்தாதான்.
இந்நிலையில் அயோத்தியதாசர் பண்டிதரின் 175 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி அவருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இடம் மற்றும் மேற்பட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.