வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றிய நிலையில், அது மண்டலமாக உருவாகி புயல் சின்னமாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக எங்கேயும் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, புயல் சின்னம் மணிக்கு மூன்று கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது ஒரே இடத்தில் நீடிப்பதால் அது எந்த திசை நோக்கி நகரும் என்பதை கணிக்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள தகவல்படி, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள், அதாவது நவம்பர் 30ஆம் தேதி, கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.