Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா பகுதிக்கு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: வெதர்மேன் பிரதீப் ஜான்

Mahendran
புதன், 13 நவம்பர் 2024 (13:43 IST)
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறைந்த காற்றழுத்த தாழ்வு தற்போது உள் தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் இருப்பதாக கூறியுள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து இருப்பதால் கடலோர பகுதிகளை தவிர, உள் தமிழகம், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டெல்டா பகுதிக்கு அருகில் உள்ளதாகவும், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை பகுதிகளில் காற்று மொத்தமாக குவிந்துள்ளதாகவும் இதனால் இந்த பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காற்றின் குவியல் கடலோர பகுதியை கடந்து உள் தமிழகத்திற்கு இடம் புகுந்ததால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிகிறது. இன்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்,


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments