Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை குறித்த எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 18 ஜூலை 2024 (14:42 IST)
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு இன்று உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை தகவல் வெளியிட்ட நிறைய சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இது அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் வட மேற்கு நோக்கி நகர்ந்து ஒரிசா கடற்கரையை அடைய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது தாழ்வு மண்டலமாகவும் புயலாகவும் மாறுமா என்பதை இனி வரும் நாட்களில் தான் தெரிந்து கொள்ள முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு கேரளா தெலுங்கானா ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று ஒரிசாவிலும் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் என்ற நாயை புதைத்து விடுவேன்! சிவசேனை எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை!

திமுக 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் - தமிழ்நாடு இருக்குமா.? ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி..!!

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. இன்று துணை முதல்வர் அறிவிப்பு வருமா?

தமிழக மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்.! இலங்கை நீதிமன்றம் முன் மீனவர்கள் தர்ணா.!!

மோதி இடத்திற்கு நிதின் கட்கரி வர முடியுமா? பிரதமர் பதவி குறித்த பேச்சை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்

அடுத்த கட்டுரையில்
Show comments