Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தமா? இன்று 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
புதன், 17 ஜூலை 2024 (08:02 IST)
தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வர பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்க கடலில் வரும் 19ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உருவாக்கி உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments