வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது
வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் இதனை அடுத்து தெற்கு ஆந்திர கடலோர பகுதி வழியாக கரை கடக்கும் என்றும் கூறப்படுகிறது
இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
காற்றழுத்த தாழ்வு காரணமாக டிசம்பர் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.