Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு.. எங்கெல்லாம் மழை பெய்யும்?

Mahendran
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (15:36 IST)
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேற்று வங்கக் கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதன் காரணமாக, இன்று காலை 8:30 மணியளவில், தென் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் தென் ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, கடலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனை பார்த்து தேர்வு எழுதிய ABVP பெண் நிர்வாகி..விடைத்தாளை பறிமுதல் செய்த கண்காணிப்பாளர்..!

திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் மாயம்.. நகை மற்றும் பணத்துடன் தரகருடன் ஓடிப்போனாரா?

கரூர் 41 பேர் உயிரிழப்பு விவகாரம்! ஹேமமாலினி குழு தமிழகம் வந்தடைந்தது!

காந்தியடிகளின் பிறந்தநாளில் மதுவை ஒழிக்க தீர்மானம்! கிராமசபை கூட்டங்களுக்கு அன்புமணி வேண்டுகோள்!

தேர்தலில் மன்மோகன்சிங்கை தோற்கடித்த பாஜக பிரபலம் காலமானார்.. அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments