Publish Date: Mon, 04 Feb 2019 (12:43 IST)
Updated Date: Mon, 04 Feb 2019 (12:50 IST)
மதுரையில் சிறுவர் பூங்காவில் அத்துமீறிய காதல் ஜோடிகளை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பூங்காவிற்குள் வாக்கிங் செல்லலாம், சற்று ஓய்வெடுக்கலாம் என போனால் இந்த காதல் ஜோடிகளின் அலப்பறைகளும் அட்டூழியங்களும், அச்சச்சோ சொல்லி மாளாது. அங்கு அவர்கள் செய்யும் சேட்டைகளால் பூங்காவிற்கு செல்வதற்கே பிடிக்காது. பொது இடம் என்றும் கூட பார்க்காமல் அவர்கள் கேவலமாக நடந்து கொள்வர். எல்லா காதல் ஜோடிகளையும் அப்படி சொல்லிவிட முடியாது. சில மட்டமான ஜென்மங்கள் இதையே செய்து வருவர்.
அப்படி மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் காதல் ஜோடிகள் எல்லை மீறுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. புகாரின்பேரில் பூங்காவிற்கு சென்ற போலீஸ் படை அங்கிருந்த காதல் ஜோடிகளை அழைத்து சென்றது. காதல்ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்த போலீஸார் அவர்களை எச்சரித்து அவர்களுடன் பிள்ளைகளை அனுப்பினர்.