Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோளக்காட்டுக்குள் காதலர்கள் – பன்றி என நினைத்து சுட்ட உரிமையாளர் !

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (10:19 IST)
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சோளக்காட்டுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காதலர்களை பன்றி என நினைத்து சுட்ட சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் புதிதாக ராதா என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் சோளக்காட்டில் மறைவாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதேப்போல சோளக்காட்டுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் இருட்டில் அவர்களின் அசைவைப் பார்த்து பன்றி என நினைத்து சோளக்காட்டின் உரிமையாளர்கள் சண்முகம் மற்றும் சின்னசாமி ஆகியோர் சுட்டுள்ளனர். இதில் ஆறுமுகத்தின் உடலுக்குள் பாய்ந்த குண்டு ராதாவின் மேலும் பட்டுள்ளது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ராதாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு ஆறுமுகத்தின் உடலை ரயில் பாதையில் போட்டு தற்கொலை போல மாற்றியுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்துக்கும் சண்முகம் மற்றும் சின்னசாமிக்கும் இடையில் ஏற்கனவே முன்பகை இருந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments