Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் வீட்டுக்கு சென்ற இரு கள்ளக்காதலர்கள் – ஒருவர் கொலை !

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (10:03 IST)
பெண்ணின் வீட்டுக்கு சென்ற கள்ளக்காதலர்களுக்கிடையில் வாக்குவாதம் எழுந்ததில் ஒருவர் மற்றவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில்தான் ஊருக்குத் திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் ஜெயந்தி.

இந்நிலையில் ஊருக்கு வந்த இவருக்கு அருகில் உள்ள ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே கிருஷ்ணன் என்ற கள்ளக்காதலரும் இருந்ததால் அவருக்கும் ரமேஷுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் வீட்டுக்கு ரமேஷ் சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரத்தில் கிருஷ்ணனும் அதே வீட்டுக்கு செல்ல அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கிருஷ்ணன் ரமேஷைக் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரம்: எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

திருப்பதியில் கனமழை வெள்ளம்: நிலச்சரிவு அபாயம்: தேவஸ்தான ஊழியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments