Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரதட்சனை கொடுமை - 6 மாத கர்ப்பிணி காதலி தீக்குளித்து மரணம்

Advertiesment
வரதட்சனை கொடுமை - 6 மாத கர்ப்பிணி காதலி தீக்குளித்து மரணம்
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (01:11 IST)
காதல் கணவனின் வரதட்சனை கொடுமையால் 6 மாத கர்ப்பிணியான காதலி தீக்குளித்து மரணமடைந்த அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
காஞ்சிபுரத்தை அடுத்த விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு (வயது 21). இருவரும் 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்மு 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
 
இந்நிலையில் சந்தானம் காதல் மனைவி அம்முவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அம்மு கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
 
உடனே அம்முவை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்மு பரிதாபமாக இறந்தார். 
 
இது குறித்து காவல்துறை ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அம்முவின் பெற்றோர் காஞ்சிபுரம் கணவரின் வரதட்சணை கொடுமையால் அம்மு தற்கொலை செய்து இருப்பதாக கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சமுத்துவிற்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று நீதிமன்ற விசாரணை