கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அபிநயா என்ற ஆசிரியைத் தன்னை ஏமாற்றிய காதலன் மீது போலிஸார் புகார் வாங்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள ஜோதி நகரைச் சேர்ந்த அபிநயாவும் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகம்பாளையத்தைச் சேர்ந்த பாலன் என்பவரும் கல்லூரிக் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் சமூகவலைதளங்களின் மூலமும் அவ்வபோது நேரில் சந்தித்தும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் பாலன் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் வீட்டில் உள்ளவர்களை சம்மதிக்க வைத்துப் பின்னர் திருமணம் செய்துகொள்வதாக அபிநயாவையும் அவரது குடும்பத்தாரையும் சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சேலத்தில் அபிநயாவும் பாலனும் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அதன் பின்னர் பதிவுத் திருமணம் செய்துகொள்வதற்கு தனது சான்றிதழ்களை எடுத்துவருவதாகக் கூறி சென்றவர் தலைமறைவாகியுள்ளார்.
இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிநயா, கிருஷ்ணகிரி காவல்நிலையத்திலும் பொள்ளாச்சி காவல்நிலையத்திலும் புகார் கொடுக்க சென்றுள்ளார். ஆனால் இரண்டு ஸ்டேஷன்களிலும் அபிநயா குடும்பத்தாரிடம் இருந்து புகார்களை வாங்க மறுத்துள்ளதோடு அவரை இழிவாகவும் பேசியுள்ளார். இதனால் மனன்முடைந்த அபிநயா வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அபிநயாவின் பெற்றோர் ‘தனது பெண்ணின் சாவுக்கு பாலன் மற்றும் காவல்துறையினரின் அலட்சியமேக் காரணம்’ எனக் கூறியுள்ளனர்.