Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 வயது பெண்ணுக்கும் 23 வயது இளைஞனுக்கும் காதல் : இருவர் பலி

40 வயது பெண்ணுக்கும் 23 வயது இளைஞனுக்கும் காதல்  : இருவர் பலி
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (20:40 IST)
ஈரோடு மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுக்காரன் தெருவில் வசித்துவந்தவர் இளைஞர் சரவணன்(23). இவருக்கும் இதே பகுதியில் வசித்து வந்த பாரதி (40) என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது. பாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி கலியாண வயதில் இருபெண்கள் உள்ளனர்.
ஆனால் இதை உணராத பாரதி, சரவணன் மீது கொண்ட தவறான உறவை தொடர்ந்துள்ளார்.  ஊரார் மற்றும் உறவினர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு  ஊரைவிட்டு ஒடி, ஈரோடி மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தில்இருந்து கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.
 
இதுபற்று அறிந்த உறவினர்கள் அவர்கள் இருந்த வீட்டிற்கே சென்று இருவரையும் மிரட்டியுள்ளார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாத சரவணன் - பாரதி கதவைத் தாழிட்டுக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ பற்ற வைத்துக்கொண்டனர்.
 
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கறுகிய இருவரது உடலையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி - சீமான்