உளுந்தூர்பேட்டை அருகே நீண்ட நேரமாக லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததால் மக்கள் உள்ளே பார்த்தபோது ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே லாரி ஒன்று நீண்ட நேரமாக நின்று இருந்துள்ளது. நீண்ட நேரமாக சந்தேகத்திற்கிடமான வகையில் லாரி நின்றதால் பொதுமக்கள் சிலர் சென்று லாரியில் நோட்டம் விட்டுள்ளனர், பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் லாரிக்குள் ஆய்வு செய்தபோது அதன் ஓட்டுனர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இறந்தவர் புதுச்சேரி மாநிலம் குயவர்பாளையத்தை சேர்ந்த கதிரேசன் என்பவர் தெரிய வந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றி பிரேச சோதனைக்கு அனுப்பியுள்ள போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.