தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட மருத்துவர்.. அலட்சிய சிகிச்சை அம்பலம்..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (11:25 IST)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு தலையில் தையல் போட்டபோது தலைக்குள் இரும்பு நட்டை வைத்து தையல் போட்டு அனுப்பிய மருத்துவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவர் கடந்த திங்கட்கிழமை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தலையில் தையல் போட்ட நிலையில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. 
 
இதனை அடுத்து உறவினர்கள் கார்த்திகேயனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு நட்டு இருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தையலை பிரித்து அந்த இரும்பு நட்டையை அகற்றி உள்ளனர். 
 
இது குறித்து கார்த்திகேயனின் உறவினர்கள் கூறும்போது மருத்துவரின் அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு பிளாக்மெயில் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்..!

234 தொகுதிகளிலும் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!

குடியரசு தின விழாவிற்காக வேலை வாங்கிய பள்ளி நிர்வாகம்.. 8ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி..!

வடநாட்டு அரசியலில் திருப்பம் என ரஜினி சொன்னது.. வைரமுத்துவின் பொய்க்கவிதை: நயினார் நாகேந்திரன்..

கூட்டணிக்கு வரலைல்ல.. விஜய்யை வச்சு செய்யும் டிடிவி, நயினார் நாகேந்திரன், செல்லூர் ராஜு..!

அடுத்த கட்டுரையில்
Show comments