Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''#தமிழ்நாடு வாழ்க '' - நடிகர் கமல்ஹாசன் டிவீட்...இந்திய அளவில் டிரெண்டிங்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (16:51 IST)
தமிழ்நாடு ஆளுனர்  ஆர்என்.ரவி அவ்வப்போது, அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில்  கலந்துகொண்டு அவர் பேசுவது விமர்சனர்கள் ஏற்படுத்தி வரும், நிலையில்.  சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி  ‘’மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை ‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என தெரிவித்திருந்தார்.

இதற்கு, தமிழ் நாட்டில் உள்ள ஆளுங்கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா தமிழ் நாடு என்று என் மா நிலத்தை அழையுங்கள் என்று தொண்டகளிடம் கூறியிருந்தார்.

அக்கட்சியின்  செய்தித் தொடர்பாளார் டிகேஎஸ் இளங்கோவன், ‘’ மகாராஷ்டிரம் என்றால் என்ன? இந்தியாவை விட பெரிய நாடு என்று பொருள். மகாராஷ்டிரத்தின் பெயரை முதலில் மாற்றச் சொல்லுங்கள். பிறகு தமிழ்நாட்டிற்கு வரலாம்’’என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், தன் டுவிட்டர் பக்கத்தில், #தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் முக ஸ்டாலின்  தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்! என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழ் நாடு வாழ்க என்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ: ‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என்ற ஆளுனரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு விமர்சனம்!

இதுவைரலாகி வருகிறது.

தற்போது #தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments