Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவியே இந்த சம்பவத்திற்கு காரணம் - கல்லூரி முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு

Advertiesment
மாணவியே இந்த சம்பவத்திற்கு காரணம் - கல்லூரி முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு
, சனி, 14 ஜூலை 2018 (09:16 IST)
மாணவி லோகேஷ்வரி இறந்ததற்கு அவரது பயமே காரணம் என அந்த கல்லூரியின் முதல்வர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவி லோகேஷ்வரி தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவிக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் போலி பயிற்சியாளர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் அவரது பயிற்சியாளர் சான்றிதழும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
webdunia
இதுகுறித்து பேசிய அந்த கல்லூரியின் முதல்வர் விஜயலட்சுமி, அந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலை பயமின்றி பின்பற்றியிருந்தால் மாணவி உயிரிழந்திருக்க மாட்டார். மேலும் பயிற்சியாளரின் பேச்சைக் கேட்காததால் தான் இச்சம்பவம் நடைபெற்றது எனக் கூறியுள்ளார். முதல்வரின் இந்த பொறுப்பற்ற பேச்சு பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 128 பேர் பரிதாப பலி