ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என அறிவிப்பு.
காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இதனை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளது தமிழக அரசு.
15,16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.