Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை போல மதுரை, திருவண்ணாமலை, வேலூர்: அதிரடி காட்டுமா அரசு?

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (17:22 IST)
மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. எனவே இது குறித்து முடிவெடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார் முதல்வர்.  
 
மருத்துவ குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும் மாறாக கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொதுமுடக்கத்தை தீவிரமாக்கலாம் என யோசனை கூறியுள்ளதாக தெரிகிறது.   
 
எனவே, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த தமிழக அரசு முடிவு என தற்போதைய தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து தற்போது மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதன்படி சென்னையை போல மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு என கூறப்படுகிறது. 
 
விரைவில் ஊரடங்கு குறித்து தமிழக அரசு சார்பில் அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments