தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து இன்று காலை தமிழக முதல்வர் மருத்துவர் குழுவினர்களிடம் ஆலோசனை நடத்தினார்
இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு இருக்காது என்றே தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
அதுமட்டுமின்றி சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் தற்போது ஊரடங்கில் அனைத்து விதிகளும் அடுத்து வரும் ஊரடங்கிலும் பின்பற்றப்படும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது