திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
ஆம் கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
எந்தெந்த பகுதிகளில் முழு பொதுமுடக்கம்?
சென்னை முழுவதும் பொதுமுடக்கம்.
திருவள்ளூரில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம்
திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளில் பொதுமுடக்கம் அமல்
பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமுடக்கம்
செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளில் முழு பொதுமுடக்கம்
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம்