முழு ஊரடங்கு பீதியால் கடைகளில் குவியும் பொதுமக்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (18:00 IST)
முழு ஊரடங்கு பீதியால் கடைகளில் குவியும் பொதுமக்கள்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது 
 
ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடலாம், டீ கடைகளைத் திறக்கலாம், சமூக இடைவெளி விட்டு கடைகள் அனைத்தும் திறக்கலாம், சலூன் கடைகள் திறக்கலாம் என்பது போன்ற பல தளர்வுகளை அறிவித்தது இந்த நிலையில் இன்று மாலை திடீரென சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு என மீண்டும் அறிவித்துள்ளது இதனால் 4 மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு என்பதால் 10 நாட்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் குவிந்துள்ளதால் தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்க விடப்படுகிறது. இவ்வளவிற்கும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை கடைகள் உண்டு என அறிவிக்கப்பட்ட போதிலும் பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முண்டியடித்து வருவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது 
 
அரசின் குளறுபடி அறிவிப்புகள், மக்களின் புரிந்து கொள்ளாமை ஆகியவைகளால் தமிழகம் கொரோனாவால் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சமூகநல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments