Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக, திமுக சின்னங்கள் மாற்றம்! – தஞ்சையில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (10:18 IST)
தஞ்சையில் சில வார்டுகளில் சின்னங்கள் மாறியிருப்பதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவின்போது குழப்பங்கள் ஏற்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்ட வார்டுகளுக்கான மறு வாக்குப்பதிவுகளும் இன்று நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வாக்காளர்களின் பெயர்களும், சின்னங்களும் மாறியிருப்பதாக ஏற்பட்டுள்ள குழப்பத்தால் சில வார்டுகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் உள்ளாட்சி பகுதிகளில் 8 இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு ஒன்றியம் 15வது வார்டில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் சின்னங்கள் மாறியுள்ளதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments