Publish Date: Tue, 12 Nov 2019 (12:33 IST)
Updated Date: Tue, 12 Nov 2019 (12:36 IST)
தமிழகத்தில் டிசம்பர் 27,28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது வருகிற டிசம்பர் மாதம் 27,28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் நடத்த வசதியாக டிசம்பர் 23 க்குள் அரையாண்டு தேர்வை நடத்தி முடிக்கவும் பள்ளிக் கல்வித் துறைக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.