Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:54 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஏற்கனவே தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும், பட்டியல் இன பெண்கள் மற்றும் பொது பிரிவு பெண்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் அமைச்சர் தாமோதரன் அவர்கள் வரும் 13ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments