Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை போன்றே கமல்ஹாசனுக்கும் குடும்பம் இல்லை: சுஹாசினி பேட்டி

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (17:44 IST)
மோடியை போன்றே கமல்ஹாசனுக்கும் குடும்பம் இல்லை
மோடி எவ்வாறு குடும்பம் இல்லாமல் தனியாளாக இருக்கின்றாரோ அதேபோல் கமல்ஹாசனும் தனியாளாக இருக்கிறார் என சுகாசினி பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக சுகாசினி வாக்கு சேகரித்து வருகிறார் என்பதும் இன்று காலை சுஹாசினியும் கமல்ஹாசன் மகள் அக்ஷராஹாசனும் தெருவில் இறங்கி குத்தாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சுகாசினி சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி எப்படி தனி ஆளாக இருக்கின்றாரோ அதேபோல் கமல்ஹாசனும் தனி ஆளாக இருக்கிறார், இருப்பார் என்றும் குடும்பத்தினர் யாரும் கமலுக்கு பிரச்சனை தர மாட்டார்கள் என்றும் கூறினார்
 
மோடிக்கு அரசியலில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் அவருக்கு குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, அதேபோல் கமலஹாசனுக்கு குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கட்சியில் இருப்பவர்கள் யாராவது தவறு செய்தால் அவர் சும்மா விட மாட்டார் என்று கூறினார். சுஹாசினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments