Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் ஒரு நொடியில் போன உயிர்... பதறவைக்கும் வீடியோ காட்சி

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (21:36 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணாகப்பட்டு பகுதியில் வசித்தவந்தவர் பிரபு (35). இவருக்கு தேவசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். பிரபு ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுநராகப் வேலைசெய்துவந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளியிலிருந்து தனது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வருவற்காக, தனது இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் சென்றார்.
 
அப்போது ஆந்திராவில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று பிரபு மீது ஏறியது. இதில் தலை நசுங்கி பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
ஆனால் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தாமலேயே சென்றுவிட்டதால் போலிஸார் ஓட்டுநர் குறித்து விசாரித்துவருகின்றனர்.
 
மேலும், இந்த விபத்து நடக்க காரணம் சைக்கிளில் வந்த ஒருவர் தான் என்று, அவர் சைக்கிள் ஓட்டி வந்து, இருசக்கரவாகனத்தில் வரும் பிரபு மீது விழுந்தார். இதில் நிலைதடுமாறி பிரபு சாலையில் விழ...அங்கு சென்ற லாரியின் சக்கரம் பிரபுவின் தலையில் ஏறிச்செல்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments