Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விழா நடத்த மைதானம் கொடுத்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்!

J.Durai
புதன், 23 அக்டோபர் 2024 (18:04 IST)
திருச்சி மாநகர் கீழ புலிவார்டு  ரோடு அருகே ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சந்தான வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி செயல்படுகிறது ஒரே கல்வி நிறுவனத்திற்கு கீழ் அந்த இரண்டு பள்ளிகளும் செயல்படுகிறது.
 
இரண்டு பள்ளிகளும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இரண்டு பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று  மாலை அந்த பள்ளிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது ‌.அதில் நீங்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு கூட்டம் நடத்த தங்கள் பள்ளி மைதானத்தை வழங்கி உள்ளீர்கள் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் இது வெறும் மிரட்டல் அல்ல நாளை மாலை நிச்சயம் குண்டு வெடிக்கும்,இரண்டு பள்ளிகளிலும் நாளை மாலை வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று அங்கு வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மோப்ப நாய்கள் ஆகியவற்றை  கொண்டு அங்கு சோதனை மேற்கொண்டனர்.
 
வெடிகுண்டு மிரட்டலால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஒரு மாதமாகவே திருச்சியில் உள்ள பிரபல பள்ளிகள் கல்லூரிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது கடந்த வாரம் திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று பிரபல கல்வி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது போன்ற மிரட்டல் விடுக்கும் நபர்களை உடனடியாக கண்டறிய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை......

தவெக மாநாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டால்.. 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம்..!

வலுபெறும் ‘டானா’ புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!

இப்படி ஒரு காமன்வெல்த் போட்டி தேவையா? ப சிதம்பரம் ஆதங்கம்..!

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு.. ரூ. 420 கோடி நன்கொடை கொடுத்த பில்கேட்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments