Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்க பாடம் புகட்ட ஈரோடு இடைத்தேர்தலில் களம் காணுவோம்- முகிலன்

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (22:17 IST)
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை மக்களின் போராட்டத்தினால் தான் திமுக அரசு அமைத்தது என்றும் தக்க பாடம் புகட்ட ஈரோடு இடைத்தேர்தலில் களம் காணுவோம் என்றும் கரூரில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் அதிரடி பேட்டி.
 
கரூரில் கொலை செய்யப்பட்ட சமூக நல ஆர்வலர் ஜெகநாதன் ஒரு திமுக நிர்வாகி | அவரது கட்சியை சார்ந்த ஒருவர் கூட வந்து துக்கம் விசாரிக்க வில்லை | ஆட்சிக்கு வந்து சில வருடங்கள் ஆகியும் திமுக அரசு சமூக நல ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றது என்றும் கரூரில் அதிரடியாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் அதிரடி பேட்டியளித்துள்ளார்.
 
கரூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக செயற்பாட்டாளர் ஜெகநாதன் என்பவர் ஸ்பீடு பிக் அப் வேனில் உயிரிழந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பினையும், ஏற்கனவே அவரை கொலை செய்ய தனியார் கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் திட்டமிட்டதாகவும், அதில் குறிப்பாக ஒரு தனியார் கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்டோரை குண்டர் சட்ட்த்தில் கைது செய்யப்பட்டும், இதுவரை, ஜெகநாதனின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை இல்லை என்றும், அவரது குடும்பத்தில் அரசு பணி வழங்க வேண்டுமென்றும் கூறி கரூரில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் தலைமையில் சமூக நல ஆர்வலர்கள் கோஷமிட்டபடி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அப்போது தற்போதைய திமுக அரசில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், மக்களின் பிரச்சினைகளையும், போராட்டத்தினையும் முன் வைத்து தான் திமுக அரசு ஆட்சி அமைத்தது என்பதனை சுட்டிக்காட்டிய சமூக செயற்பாட்டாளர் முகிலன்., ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உயிரிழந்த ஜெகநாதனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments