Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

களைக்கட்டும் பக்ரீத் பண்டிகை..! ரூ .5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை..!!

Goat Sales

Senthil Velan

, புதன், 12 ஜூன் 2024 (13:44 IST)
உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி மூன்று மணி நேரத்தில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
 
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உளுந்தூர்பேட்டையில் உள்ள வார சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக இருந்தது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில், தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
 
காலை ஐந்து மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, பெங்களுார் ஐதராபாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட அதிக விலைகொடுத்து ஆடுகளை வாங்கிக் சென்றனர்.
 
இதில், வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8000 முதல் 25,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை இந்தச் சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 3 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா.ஜ.க வென்றதுதான் வேதனையாக உள்ளது.. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!