Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலால் பாதித்த தமிழகத்திற்கு கைக் கொடுப்போம் வாருங்கள்! காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (10:23 IST)

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கரையை கடந்த நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளில் மக்களுக்கு உதவ ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்த நிலையில் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ததுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மீட்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி “தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலின் பேரழிவு செய்தி அறிந்து கவலை அடைந்தேன். இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

வீடுகள், உடமைகளை இழந்தவர்களுக்கு துணையாக நிற்பேன். மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் முடிந்தவரை நிவாரண பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயலால் பாதித்த தமிழகத்திற்கு கைக் கொடுப்போம் வாருங்கள்! காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு!

டிஆர் பாலுவை அடுத்து மக்களவைக்கு கனிமொழி அளித்த நோட்டீஸ்.. என்ன கூறியுள்ளார்?

கோவில்களில் இருந்து, ரூ.1,153 கோடி எடுக்கப்பட்டுள்ளது: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்..!

பங்குச்சந்தை 2வது நாளாக மீண்டும் உயர்வு.. உச்சம் நோக்கி செல்லுமா நிஃப்டி?

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments