Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி.! கிராமங்களுக்கு மோடி துரோகம்.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்.!

karga

Senthil Velan

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (11:21 IST)
நூறு நாள் வேலை திட்டத்தை முடக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகள் மீதான மோடி அரசின் அக்கறையின்மை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி காங்கிரஸ் தலையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வேலை உரிமையை உறுதி செய்யும் வகையில் 100நாள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் இப்போது குறைந்த ஊதியம், நிச்சயமற்ற வேலை நாட்கள், வேலை அட்டை திடீரென ரத்தாவது என பல்வேறு சிக்கல்களுடன் 13 கோடி பேர் வேலை செய்வதாக விமர்சித்துள்ளார். 
 
தொழில்நுட்பம், ஆதார் என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி மோடி அரசு 7 கோடி பேரின் வேலை உரிமை அட்டைகள் ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கார்கே, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை பட்ஜெட்டில் 100நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

 
நூறு நாள் வேலை திட்டத்தை முடக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகள் மீதான மோடி அரசின் அக்கறையின்மை தொடர்கிறது என்றும், இதுவே இந்திய கிராமங்களுக்கு பிரதமர் மோடி செய்துள்ள துரோகத்திற்கான சாட்சி எனவும் கார்கே விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீசார் கட்டுபாட்டில் இருந்த முக்கிய குற்றவாளி உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்!