மயிலாடுதுறையில் ஒரு வாரமாக போக்கு காட்டி வரும் சிறுத்தை.. பொதுமக்கள் அச்சம்

Siva
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (12:03 IST)
மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினருக்கு  போக்கு காட்டி வரும் சிறுத்தை பிடிபடாமல் இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

சிறுத்தை தென்படுவதாக கூறிய பகுதிகளில் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் ஒரு வாரமாக வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து விரைவில் சிறுத்தையை பிடித்து மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments