நீலகிரியில் காவல் நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக நுழைந்து திரிந்த வீடியோ வைரலாகியுள்ளது.
மலைப்பகுதியான நீலகிரியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ள நிலையில், காடுகளில் சிறுத்தை, காட்டு எருமைகள் என பல விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் இந்த விலங்குகள் மனித குடியிருப்புக்குள் புகுந்து பொருள்சேதம், உயிர் சேதம் விளைவிப்பது நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அங்கு யாராவது இருக்கிறார்களா என்று உள்ளே சென்று உலாவிய சிறுத்தை யாரும் இல்லாததால் திரும்ப வெளியே செல்கிறது. அதுவரை சிறுத்தை கண்ணில் படாமல் உள்ளே மறைந்திருந்த காவலர் மெதுவாக வெளியே வந்து எட்டி பார்த்துவிட்டு கதவை சாத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K