நீலகிரிக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் கட்டாயமாக உள்ள நிலையில் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடைக்கால விடுமுறை தொடங்கிவிட்டதால் மக்கள் பலரும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை சுற்றுலா பகுதிகளுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. அதனால் கடந்த ஏப்ரல் 1 முதலாக நீலகிரி, ஊட்டி பகுதிகளுக்கு செல்லும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இ-பாஸை சோதிப்பதற்காக நீலகிரியில் மாவட்ட எல்லைகளான கல்லாறு, குஞ்சப்பணை, கக்கநல்லா உள்ளிட்ட 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. இதனால் நீலகிரியின் அனைத்து நுழைவாயில்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் உருவாவதால் உள்ளூர் மக்கள் சிக்கலுக்கு உள்ளானார்கள்.
இதனால் கல்லாறு, குஞ்சப்பனை, மசினக்குடி, மேல்கூடலூர், கெத்தை ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் மட்டும் இ-பாஸ் சோதனையை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் இந்த 5 சோதனைச்சாவடிகளில் மட்டும் இ-பாஸ் சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K