இன்று வெளியான லியோ படம் திமுகவின் தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் லியோ. இன்று வெளியானது முதலே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு லியோ படத்தின் பெரும்பான்மை காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.
லியோ திரைப்படம் வெளியாகும் கடைசி தருணம் வரை பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் லியோ ஓடி வருகிறது.
இதுகுறித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் “திமுகவின் அத்தனை தடைகளையும் மீறி லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். கடைசி ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மீடியாக்களும் லியோ பற்றிதான் பேசினார்கள். அந்தளவு திமுகவினர் லியோவை படுத்திவிட்டார்கள்” என கூறியுள்ளார்.
முன்னதாக லியோ படம் குறித்து பேசிய புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜனும் லியோவுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு திமுக காரணம் என பேசியது குறிப்பிடத்தக்கது.