Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவை தேர்தல் நாளின்போது ஊதியத்துடன் கூடிய விடுமுறை - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Advertiesment
மக்களவை தேர்தல் நாளின்போது ஊதியத்துடன் கூடிய விடுமுறை - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

sinoj

, வியாழன், 21 மார்ச் 2024 (17:34 IST)
மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
 
நாடு முழுவதும் தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில்  அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும்  இந்தியத் தேர்தல் ஆணையம்   நேற்று உத்தரவு பிறப்பித்தது.
 
அதில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பக அறிக்கையை இன்று  மாலை  5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
மேலும், சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகளை 48 மணி நேரத்தில் அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
 
இந்த  நிலையில், வரும் மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு..! பெங்களூர் போலீசார் நடவடிக்கை..!!