Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மின்சார ரயிலில் மாறுகிறது பெண்களுக்கான தனிப்பெட்டி.. ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை..!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (18:41 IST)
சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கான தனி பெட்டிகள் இனி நடுப்பகுதிக்கு மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 தாம்பரம் - செங்கல்பட்டு - சென்ட்ரல்,  திருவள்ளூர் - அரக்கோணம்,  சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த ரயிலில் பெண் பயணிகளுக்கு என இரண்டு பெட்டிகள் இருக்கின்றன ஆனால் இந்த பெட்டிகள் தற்போது கடைசியில் இருக்கும் நிலையில் இந்த பெட்டிகளை நடுப்பகுதிக்கு மாற்ற ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
 
சமீபத்தில் செல்போன் பறிக்கப்பட்டபோது தவறி விழுந்த பெண் ஒருவர் பலியானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பெண்களுக்கான பெட்டிகள் ரயிலின் நடுப்பகுதியில் ஒரே பெட்டியாகவோ அல்லது இரண்டு பெட்டிகளாகவோ ஒதுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments