திருநெல்வேலி உள்ள பள்ளிவாசல் ஊழியர் ஒருவர் தான் பெறும் ஊதியத்தில் 75 சதவீதத்தை நாய் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பதற்காக செலவிடுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை தெருவை சேர்ந்த பள்ளி வாசலில் துப்புரவு தொழில் செய்பவர் முகம்மது அயூப். இவர் மிகச்சிறிய வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு தினமும் 30 பூனைகள், 15 நாய்கள் விருந்தாளியாக வருவது வழக்கமாம். அவைகளுக்கு சாப்பாடு, பால் பொன்றவற்றை அயூப் வழங்குவது உண்டு.
அவைகளுக்கு அளிக்கப்படும் உணவு பொருட்களின் செலவு இவரது மாத ஊதியத்தில் 75 சதவீதமாம். இதுகுறித்து அயூப் கூறியதாவது:-
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும் பகுதியை செல்ல பிராணிகளுக்கு செலவிடுவதில் மிகவும் திருப்தி கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.