Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.30 கோடிக்கு கே.எஸ்.அழகிரி வாங்கி கொள்ள தயாரா? எல்.முருகன் கேள்வி!

Advertiesment
ரூ.30 கோடிக்கு கே.எஸ்.அழகிரி வாங்கி கொள்ள தயாரா? எல்.முருகன் கேள்வி!
, செவ்வாய், 21 ஜூலை 2020 (16:21 IST)
ரூ.30 கோடிக்கு கே.எஸ்.அழகிரி வாங்கி கொள்ள தயாரா?
தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா? என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
பெருந்தலைவர்‌ காமராஜர்‌ அரும்பாடுபட்டு உருவாக்கித்‌ தந்த தமிழ்நாடு காங்கிரசுனுடைய கமிட்டிக்கு அறக்கட்டளைக்கான சொத்துக்கள்‌ தவறான வழிகளில்‌ பயன்படுத்த முயற்சிப்பதை சுட்டிக்காட்டிய
காரணத்தினால்‌ தமிழ்நாடு காங்கிரசனுடைய தலைவர்‌ கே.எஸ்‌.அழகிரி தமிழக பா.ஜக தலைமை அலுவலகம்‌ இயங்கும்‌ இடத்தை ரூ.30 கோடி மதிப்புள்ளதென்றும்‌ அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள்‌ என்றும்‌ தெரிவித்திருக்கிறார்‌. 
 
20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலையையும்‌ இப்போதிருக்கிற சந்தை மதிப்பையும்‌ ஒன்றுபடுத்திப்‌ பேசியிருப்பது, அவர்‌ எத்தகைய குழப்பத்திலிருக்கிறார்‌ என்பதை எடுத்துக்காட்டுகிறது/ ரூ.30கோடி என்று எந்த அடிப்படையில்‌ நிர்ணயம்‌ செய்தார்‌ என்று தெரியவில்லை. அவர்‌ குறிப்பிட்டுள்ள படி ரூ.30கோடிக்கு நாங்கள்‌ இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம்‌. அவர்‌ வாங்கிக்கொள்ள தயாரா? மேலும்‌ முக்தா சீனிவாசன்‌ அவர்களின்‌ மகன்‌ முக்தா சுந்தர்‌ முக்கிய பொறுப்பில்‌ பா.ஜ.க.வில்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. இந்த இடத்தை வாங்கும்‌ பொழுது முக்தா சீனிவாசன்‌ காங்கிரஸின்‌ முக்கிய தலைவராக இருந்தார்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது
 
இவ்வாறு எல்.முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவாக்சின் மருந்து பரிசோதனை: சென்னையில் துவங்கியது!!