Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானும் கமல்ஹாசனும் தந்தை பெயரை வைத்து முன்னேறவில்லை… கார்த்திக் சிதம்பரத்துக்கு குஷ்பு பதில்!

நானும் கமல்ஹாசனும் தந்தை பெயரை வைத்து முன்னேறவில்லை… கார்த்திக் சிதம்பரத்துக்கு குஷ்பு பதில்!
, புதன், 24 மார்ச் 2021 (12:50 IST)
காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கமல் மற்றும் குஷ்பு மேல் வைத்த விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களால் தமிழகம் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் அதற்கு பதில் சொல்லி மற்றொரு குற்றச்சாட்டை வைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ‘மக்கள் நீதிமய்யம் , நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு தோல்விக்குப் பின்னர் செல்ல மாட்டார்கள். இது கமல் மற்றும் குஷ்பு போன்றவர்களுக்கும் பொருந்தும்’ எனக் கூறியிருந்தார்.

அவருக்கு டிவிட்டரில் பதில் கூறிய ஆயிரம் விளக்கு வேட்பாளர் குஷ்பு ‘நானும் கமல்ஹாசனும் உங்களைப் போல தந்தையின் பெயரை கொண்டு அரசியலில் வெற்றி பெறவில்லை. எங்கள் கடினமான உழைப்பால் முன்னேறி உள்ளோம். உங்கள் பயத்தை இப்படி பொதுவெளியில் காட்டாதீர்கள். உங்கள் தந்தைக்கு அவமானத்தை தேடி தராதீர்கள்.’ எனப் பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு!