Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கணி தீ விபத்து; டிரெக்கிங் கிளப் உரிமையாளர் முன்ஜாமீன் கோரி மனு

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (08:47 IST)
குரங்கணி  தீ விபத்து தொடர்பாக சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். 
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையான குரங்கணி  மலைப்பகுதியிலுள்ள ஒத்தமரம் பகுதியில் கடந்த 11 ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 36 பே சிக்கி கொண்டனர். அதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகிய நிலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று வரை 22 பேர் பலியாகியுள்ளனர்.
 
தமிழக சட்டசபையில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்து 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்திட உத்தவிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஒருங்கிணைத்து அனுப்பியதாக கூறப்படும், சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் ஜியாட்டை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று பீட்டர் வான் கெய்ட் தரப்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments