Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைவிட்ட குமாரசாமி : கர்நாடகாவில் காலா ரிலீஸ் இல்லை?

Advertiesment
கைவிட்ட குமாரசாமி : கர்நாடகாவில் காலா ரிலீஸ் இல்லை?
, செவ்வாய், 5 ஜூன் 2018 (18:39 IST)
காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 
கர்நாடகாவில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்ட நீதிமன்றம், இருப்பினும் காலா படத்தை வெளியிடும் கர்நாடக தியேட்டர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இன்று மாலை உத்தரவிட்டது.
 
கர்நாடகாவில் 'காலா' படத்தை திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் 'காலா' படத்தை வெளியிட ஒத்துழைக்கின்றோம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் ரஜினி இந்த நிபந்தனையை ஏற்று கொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது.
webdunia

 
இந்நிலையில், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய நீதிமன்றத்தின் நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்படத்திற்கு கர்நாடக வர்த்தகசபை மற்றும் திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, இப்படத்தை திரையிடாமல் இருப்பதே நல்லது. அப்படி வெளியிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை தயாரிப்பாளரே எதிர்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே, காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வை மாற்ற முடியாது: தமிழிசை திட்டவட்டம்!