Publish Date: Fri, 05 Mar 2021 (10:00 IST)
Updated Date: Fri, 05 Mar 2021 (05:47 IST)
திமுக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு க செல்வம் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் திமுக தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் ஸ்டாலின் குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியதும் பாஜக தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்ததாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் தன் காரில் பாஜக கொடியோடு வலம் வருவதாகவும் சொல்லப்படுகிறது.