தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதாகவும், அதனால் நடிகை கஸ்தூரி ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சினிமா விழா ஒன்றில் பேசினார்.
கே.சி.சுந்தரம் இயகக்கிய ‘ஜூலை காற்றில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது இந்த விழாவில் கலந்து கொண்டு கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: 'அமெரிக்காவில் திரைப்பட இயக்குநர்களுக்கான சங்கக் கட்டிடம் பல அடுக்கு மாடிகளில் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். அதேபோல் தற்போது சென்னையில் நடிகர் சங்கக் கட்டிடமும் பல அடுக்கு மாடிகளாக உருவாகியிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் பின்னணியில் உழைத்த கார்த்தியைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அவரது ராசியான கரங்களால் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றுள்ளது. அதனால் இந்தப் படமும் வெற்றிபெறும்.
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுகள் அடங்கிய யூ டியூப் சேனலைப் பார்த்து வியந்திருக்கிறேன். ‘படையப்பா’வில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு, அந்தப் பெண்ணிடம் உள்ள துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால், நடிகை கஸ்தூரி ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு கேஎஸ் ரவிகுமார்பேசினார்